Chettinad Chicken Varuval

Chettinad Samayal /Chettinad Chicken Varuval

செட்டிநாடு வறுத்த கோழி

செய்முறை:

சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக பாத்திரத்தில் வைக்கவும்.

மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து மைப்போல் அரைத்து சிக்கனுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் 1 மேசைக்கரண்டி, தேவையான உப்பு சேர்த்து மீண்டும் பிசறி விட வேண்டும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.

கடலை மாவுடன், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து திக்காக பஜ்ஜி மாவு போல் செய்து கொள்ளவும். தேவையெனில் அரிசி மாவும், ஆப்ப சோடாவும் சேர்க்கலாம்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை கடலை மாவில் தோய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்நிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.(பொரிக்கும்போது கடலை மாவு வாசனையில்லாமல் இருக்க வேண்டும்)

மற்றுமொரு கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக வதக்கி விடவும்.

இத்துடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கிளறி, மல்லிதழை தூவி இறக்கவும்.

Post Free Business Address