★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில்--புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் - புதுக்கோட்டை
செல்லும் வழி

அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில் புதுக்கோட்டை.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது பனங்குளம் பெரிய பாலம் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து சிறிது தூரம் நடைப்பயணத்தில் அமைந்துள்ளது அய்யனார் கோயில்.

கோயில் பெருமைகள்

இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும், பொருளையும் வாரி வழங்கும் அன்னையாகத் திகழ்கிறாள் அரியநாச்சி அம்மன். செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம். ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய் வெள்ளி என்றில்லாமல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். மேலும், இந்த மாதத்தில் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். பவுர்ணமி தோறும் லட்சார்ச்சனையும் திருவிளக்கு பூஜையும் இங்கு நடைபெறுவது சிறப்பு. இங்கே உள்ள நாகர் விக்கிரகத்துக்குப் பாலபிஷேகம் செய்து அம்மனை வேண்டிக்கொண்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை

குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்நாத சுவாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில் அருகிலேயே அம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைப்பது என முடிவு செய்தான். அதன்படி சிவன் கோயிலுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது அரியநாச்சி அம்மன் ஆலயம். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் என்றாலும் அயைடுத்து இந்தப் பகுதியை ஆட்சி செய்த பாண்டியர்களும் இந்தக் கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவந்தங்கள் அளித்துள்ளனர். எனவே, பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, பல்லவர்களும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது தல வரலாறு.

சிறப்புகள்

சோழர்களால் கட்டப்பட்ட கோயில்.

ராகு கால வேளையில் அரளிமாலை சார்த்தி நெய்தீபமேற்றி வழிபட்டும், தங்கம் அல்லது வெள்ளியில் பொட்டு வாங்கி, அம்மனிடம் வேண்டிப் பிரார்த்தித்து கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திவிட்டு ஆலமரம் மற்றும் வேம்புமரம் ஆகியவை சேர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றிப் பிராகாரம் வந்து, மஞ்சள் சரடை மரத்தில் கட்டிவிட்டு மனதாரப் பிரார்த்தனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Photo Gallary


புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை