★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் -- மலையடிப்பட்டி
அருள்மிகு ரங்கநாதர் - மலையடிப்பட்டி
செல்லும் வழி

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் மலையடிப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம்.

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கி.மீ தொலைவில்,கீரனூர் - கிள்ளுக்கோட்டை பேருந்து சாலையில் இருக்கிறது. கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டைக்குப் போகும் டவுன் பஸ்ஸில் சென்றால், இந்தக் கோயிலின் அருகிலேயே இறங்கலாம்.

கோயில் பெருமைகள்

வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள். கணேசர். வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள். மலையையே குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. காளிகாம்பாள் மகிஷாசுரமர்த்தினியாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதி மிக அற்புதமாக உள்ளது. குகையையொட்டியுள்ள முன்மண்டபம். விஜயநகர கால கலைப்பணி உடையது. பல்லவர் கால கலைப்பாணியை ஒட்டி. வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. வேறு கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள். மலையடிப்பட்டி திருமாலின் (ஸ்ரீ ரங்கநாதர்) கோயில், கருவறையும் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்குமேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலைப்பாணி என்று சொல்லப்படுகிறது. மண்டபச் சுவரில் நரசிம்மர். வராகமூர்த்தி, தேவியருடன் திருமால் ஆகிய சிற்பங்கள் சுவரிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். நாகராஜனாகிய ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடை போன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கின்றன. திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றிக் காட்சியளிக்கிறார். கருவறையின் பின் சுவரில், அரக்கர்களும் தேவர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அனந்த சயன மூர்த்தியின் கலையமைப்பு மிகவும் சிறப்புடையது. தாயாரின் சந்நிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். கி.பி.16 - ஆம் நூற்றாண்டில், இப்பகுதி தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோத, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்குக் கொடையளித்த செய்தியும் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

மலையடிப்பட்டி குகைக் கோயில்களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறுசில பழங்கால குகைக்கோயில்களும் உள்ளன. இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை உள்ளன. இந்தக் குடவரைக் கோயிலில் சிவா-விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே மலையில் இருப்பதால், பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். திருவோண நட்சத்திர காலங்களில் விஷ்ணுவுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், நவராத்திரி திருவிழா, பிரதோஷம். கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத திருவாதிரை நாட்கள் விசேஷ தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. கண் நோய்களைப் போக்குவதால் இவருக்குக் கண் ஒளி வழங்கும் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு.

சப்தமாதர்கள், விநாயகர், முருகன், வீரபத்திரர், வாகீஸ்வரர், காளிகாம்பாள், நரசிம்மர், வராகமூர்த்தி, கமலவல்லி தாயார் சன்னதிகள் உள்ளன

சிறப்புகள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்தான் மலையடிப்பட்டி கோயில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர். திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது. சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனியே இரண்டு குகைக் கோயில்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்கிறார்கள். இங்குள்ள சிவன் கோயில், திருமால் கோயிலைவிட காலத்தால் முற்பட்டது. இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் இக்கோயில் 16-வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயில் எடுத்து, வாகீஸ்வரர் எனப் பெயரிட்டதாகச் செய்தி காணப்படுகிறது

மலையை குடைந்து அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரு குடைவரைக்கோயிலாகும். வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. வேறு கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள்.

 

Photo Gallery


புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை