9 Nagarathar Kovil

Kovil / 9 Nagarathar Kovil
அருள்மிகு கைலாசநாதர் நித்தியகல்யாணி திருக்கோயில்
இளையாற்றங்குடி கோவில்
இளையாற்றங்குடி கோவில் (Illaiyathangudi Kovil)
04577 265221
கோயில் பெருமைகள்

இங்குள்ள கயிலாசநாதர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் அனைவரும், இந்தத் தலத்தில் வந்து தங்கினர். இங்கு மன நிம்மதி கிடைத்ததால், மணல் லிங்கம் அமைத்து வழிபட்டனர். தேவர்களின் இளைப்பை ஆற்றியதால், இத் தலம் ‘இளையாற்றங்குடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி தற்போது, ‘இளையாத்தன்குடி’ என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள இறைவனின் திருநாமம் கயிலாசநாதர், அம்பாள் பெயர், நித்ய கல்யாணி. ஒரு சமயம் தஞ்சாவூரில், கோவிலுக்கு சொந்தமான வயலில் உழும் பணி நடந்தது. அப்போது மணலில் இருந்து லிங்கம் ஒன்று கிடைத்தது. அது இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

அருள்மிகு ஐநூற்றீஸ்வரர் திருக்கோயில்
மாத்தூர் கோயில்
மாத்தூர் கோயில் (Mathur Kovil)
+91 9442365271
கோயில் பெருமைகள்

இங்குள்ள ஐநூற்றீஸ்வரர் கோவில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்தல இறைவனின் திருநாமம், ‘அதோதீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளை பெரியநாயகி என்று அழைக்கிறார்கள்.

இங்கு சித்தர்களில் சிறந்தவரான கொங்கணர் தவமியற்றி இருக்கிறார். தன் விடாமுயற்சியால், பல பச்சிலை மூலிகைகளைக் கொண்டு, உலோகங்களில் கலந்து நல்ல பொன்னாக மாற்றினார். ஐநூறு மாத்துப் பொன்தான் செய்ய முடிந்தது.

கொங்கணருக்கு தாகம் உண்டானது. அவருக்கு இறைவன், மனித உருவில் வந்து தண்ணீர் தந்தார். அப்போது, அங்கிருந்த தங்கக் கலசம், மூலிகைச் சாறு ஆகியவற்றை காலால் தள்ளிவிட்டு மறைந்தார், ஈசன். எல்லாம் இறைவன் செயல் என்பதை உணர்ந்த கொங்கணா், தங்கம் செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் தவமியற்ற ஆரம்பித்தார்.

ஐநூறு மாற்றுத் தங்கம் தயாரித்த இடம் என்பதால், இந்த ஊருக்கு ‘மாத்தூா்’ என்றும், இத்தல இறைவனுக்கு ‘ஐநூற்றீஸ்வரர்’ என்றும் பெயர் உண்டானது.

Mathur Nagara Viduthi
Mathur Nagara Viduthi
75983 65271
Advertisment
eMedia Graphics Digital Photo Frames
+91 88259 11440
அருள்மிகு வளரொளிநாதா் வடிவுடையம்மை திருக்கோயில்
வைரவன் கோயில்
வைரவன் கோயில் (Vairavan Kovil)
04577 264237
கோயில் பெருமைகள்

காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வயிரவன்பட்டி. இங்கு வளர்ஒளிநாதர் ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர், வளர்ஒளிநாதர். அம்பாள் - வடிவுடை நாயகியம்மை. இங்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தியபோது அவர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்களை இறைவன், இத்தலம் இருந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்தினார். அதன்படி இங்கு வந்த தேவா்கள், வனத்திற்குள் வளரொளிநாதரும் அம்மை வடிவுடை நாயகியும் கோவில் கொண்டிருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

சிவமூா்த்தியின் அவதாரமே பைரவா். இங்கு பைரவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. நான்கு கைகளில் சூலம், கபாலம், டமருகம் மற்றும் நாகபாசத்துடன் அருள்பாலிக்கிறார். வள்ளியம்மை என்ற பெண்ணின் சிலையும் உள்ளது. இவர் வயிர வருக்குத் தொண்டு செய்தவர்.

அருள்மிகு ஆட்கொண்ட நாதசுவாமி திருக்கோயில்
இரணியூர் கோவில்
இரணியூர் கோவில் (Iraniyur Kovil)
04577 265645
9750636636
கோயில் பெருமைகள்

காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் இரணியூர் ஆட்கொண்ட நாதர் ஆலயம் இருக்கிறது. நரசிம்மராக உருவெடுத்து இரணியனை வதம் செய்தார், நரசிம்மர். ஆனால் அவனை வதம் செய்தபிறகும், நரசிம்மரின் கோபம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான், சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து திருமாலை ஆட்கொண்டாா். இத்தல இறைவனின் பெயர் ஆட்கொண்ட நாதா். அம்பாள் திருநாமம், சிவபுரந்தேவி. தவிர பெருமாளுக்கும், பத்ரகாளிக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.

அம்மன் சன்னிதி முன் நவ துர்க்கைகளும் தூண்களில் அணிவகுத்து நிற்கும் கோலம் அபூர்வக் காட்சியாகும். இது தவிர அஷ்ட லட்சுமிகளும் அணிவகுப்பது போல் அழகாக நிற்கிறார்கள். கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. பைரவர் சன்னிதியை சுற்றி 28 வகையான பைரவர் சிலைகள் உள்ளன.

Iraniyur Nagara Viduthi
Iraniyur Nagara Viduthi
97506 36636
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
பிள்ளையாா்பட்டி கோயில்
பிள்ளையாா்பட்டி கோயில் (Pillaiyarpatti Kovil)
04577 264240
கோயில் பெருமைகள்

கிழக்கே ஏழுநிலைகள் கொண்ட நெடிய கோபுரத்துடன் காணப்படுகிறது, பிள்ளையார்பட்டி ஆலயம். வடக்குத் திசையில் மூன்று நிலைகள் கொண்ட விநாயகர் கோபுரம் இருக்கிறது. மூலஸ்தானக் கருவறையில் இருகரங்களுடன் ஒருகரத்தில் லிங்கத்தையும், மற்றொரு கையால் இடுப்புக் கச்சையைப் பிடித்தப்படி இருக்கிறார். வலது பக்கம் துதிக்கை சுழன்று உள்ளது.

இது ஒரு குடவரைக் கோவில். இந்த ஆலயத்தில் நாம் காணும் ஒவ்வொரு சிலையையும், மலையைக் குடைந்தே செதுக்கியிருக்கிறார்கள். இங்கு திருவீசர் என்ற பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் வாடாமலர் மங்கை.

அருள்மிகு ஜெயம்கொண்ட சோளீஸ்வரர் கோயில்
நேமம் கோயில்
நேமம் கோயில் (Nemam Kovil)
04577 264190
கோயில் பெருமைகள்

காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் நேமங்கோயில் உள்ளது. இங்குள்ள நேமநாதர் ஆலயம் கி.பி. 714-ல் கட்டப்பட்டது. ஐந்து நிலைகளில் அழகிய பெரிய கோபுரம் கொண்ட, இத்தலத்தின் இறைவன் பெயர் நேமநாதர். அம்பாள்- சவுந்திரநாயகி. இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் பல ஆண்டுகளாக, தேன்கூடுகள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படுகின்றன. ஜெயங்கொண்ட சோழ அரசரால் கட்டப்பட்ட ஆலயம் இது. இந்த ஊருக்கு நந்திபுரம், மதுநதிபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயா்களும் உண்டு.

இந்தக் கோவிலில் விநாயகர் பல வித கோலங்களில் காட்சி தருகிறார். நின்ற திருக்கோலத்தில் நடன கணபதியாகவும், வல்லப கணபதி, தசபுஜ கணபதியாக பத்துக்கரங்களில் ஆயுதம் ஏந்தி என பல வடிவங்களில் விநாயகரை தரிசிக்கலாம். முருகனும் ஆறுமுகங்களுடனும் பன்னிரு கரங்களுடனும் பல ஆயுதங்களைத் தாங்கி அருள்புரிகிறார். முருகனின் அருகில் சிவபெருமான், சதுர்புஜத்துடன் காணப்படுகிறார். பைரவருக்குத் தனி சன்னிதியில் இருக்கிறாா். இவருக்கு இரண்டு நாய்கள் வாகனமாக இருப்பது சிறப்பு.

அருள்மிகு சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயில்
இலுப்பக்குடி கோயில்
இலுப்பக்குடி கோயில்(Iluppaikkudi Kovil)
04565 221810
கோயில் பெருமைகள்

நகரத்தார் ஒருவர் கனவில் தோன்றிய சிவபெருமான், சூடாமணி ஒன்றை வழங்கி, சிவ வழிபாட்டை தொடங்கும்படி பணித்த தலம் இது.

இத்தல இறைவன் பெயர்- சுயம் பிரகாசா், தான்தோன்றீஸ்வரர் என்பதாகும். அம்பாள் - சவுந்திரநாயகி. நான்கு வேதங்களும் பூஜித்த தலம் இது. அம்பாள் நின்ற கோலத்தில் உள்ளார். ஐநூறு மாத்து தங்கம் உருவாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, மேலும் ஆயிரம் தங்கம் செய்ய கொங்கணருக்கு ஆசை பிறந்தது. அவரை இத்தலம் இருக்கும் இலுப்பை காட்டுக்கு வரவழைத்தார், சிவபெருமான். அங்கு ஒளிவீசும் கதிா்களிடையே சிவலிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கொங்கணர், “இந்த சுயம்பிரகாசரை விட்டு தங்கத்தின் மீது ஆசை வைத்தேனே” என்று நினைத்தார்.

அருள்மிகு தேசிகநாதா் சுவாமி கோயில்
சூரக்குடி கோயில்
சூரக்குடி கோயில் (Soorakudi Kovil)
04565 281666
கோயில் பெருமைகள்

இங்கு தேசிகநாதர் ஆலயம் காணப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த ஆலயம், நான்கு நிலை கொண்ட சிறிய கோபுரத்துடன் கம்பீரம் காட்டு கிறது. சுவாமியின் திருநாமம் - தேசிகநாதர், அம்பாள் திருநாமம் - ஆவுடைநாயகி.

கோவில் கருவறையில் லிங்கத் திருமேனியில், தேசிகநாதர் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது பிரம்ம ரேகைகள் காணப்படுகிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதி, இரண்டு சிம்மங்களை தாங்கியவாறு இருக்கிறது. அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவையாகும்.

அருள்மிகு சண்டீசா் காமாட்சியம்மன் கோயில்
வேலங்குடி கோயில்
வேலங்குடி கோயில் (Velankudi Kovil)
04565 238699
If any information is missed or wrong. kinldy update us in nagaratharinfo@gmail.com