★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - துர்வாசபுரம்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் - துர்வாசபுரம்
செல்லும் வழி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம்- 622 409. புதுக்கோட்டை மாவட்டம்.

மதுரையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 25 கி.மீ., தூரத்தில் உள்ள திருமயம் சென்று, அங்கிருந்து 9 கி.மீ., சென்றால் இவ்வூரை அடையலாம். திருமயத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதி உண்டு. இவ்வூரை "தூர்மா' என்று சொன்னால்தான் உள்ளூர் மக்களுக்கு தெரிகிறது..

கோயில் பெருமைகள்

கால பைரவருக்கு கற்பூர ஆரத்தி செய்யப்படும் தட்டை பக்தர்களிடம் காட்டுவது கிடையாது. அதுபோல, இங்குள்ள பைரவருக்கு சாத்தப்பட்ட சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் பூக்களையும் பக்தர்களுக்கு கொடுப்பதில்லை. சிவன், அம்பாள் சன்னதியிலும் பிரசாதம் தரப்படுவதில்லை. இதற்கு காரணம் இருக்கிறது. இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இக்கோயிலுக்கு வந்தபோது, அவரது அமைச்சர் கோயில் மரபை மாற்றி, மன்னருக்கு முதல் தீபாராதனையை காட்டச்செய்தார். மேலும் சந்தனம், குங்குமத்தையும் பிரசாதமாக தரச்செய்தார். மன்னர் கோயிலைவிட்டு வெளியேறியபோது, வழியில் தீபாராதனையை தொட்டு வைத்த கண்ணிலும், சந்தனம் வைத்த நெற்றியிலும் வெண் புள்ளிகளுடன் குஷ்டநோய் உண்டானது. மன்னர் கலங்கிப்போய் பைரவர் முன்பு வந்து, அறியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினார். அவரது குஷ்ட நோய் தீர்ந்தது.

கால பைரவர்: கால பைரவர் இக்கோயிலில் தனிசன்னதியில் இருக்கிறார். பக்தர்கள் உபயம் இருந்தால் இவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் யாகம் நடத்தப்படும். இவருக்கு பசு நெய்யால் செய்த வடை மாலை சாத்தப்படுகிறது. இதை இப்பகுதியிலேயே செய்து தருகிறார்கள். கட்டணம் ரூ.300. கார்த்திகையில் நடக்கும் சம்பகசூரசஷ்டி விழாவின்போது ஆறு நாட்களும் பைரவர் பவனி வருகிறார். அப்போது மல்லாசுரன், பத்மாசுரன் என்னும் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது. பைரவர் இங்கு பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால் இக்கோயில், "பைரவர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்

ஆனித்திருமஞ்சனம், கார்த்திகையில் சம்பகசூரசஷ்டி, பங்குனியில் திரியம்பகாஷ்டமி.

இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கீழ் முயலகன் இடப்புறம் திரும்பியிருக்கிறான். முன்மண்டபத்தில் சனீஸ்வரர் மேற்கு நோக்கி இருக்கிறார். அருகருகில் சூரியன், சந்திரன், சப்தகன்னியர், பீட வடிவில் கருப்பசாமி இருக்கின்றனர். நவக்கிரகம், துர்க்கை சன்னதி, ராஜகோபுரம் இல்லை. கோயில் நுழைவுவாயில் கூடாரம் போன்ற அமைப்பில் இருக்கிறது.

கால பைரவருக்கு கற்பூர ஆரத்தி செய்யப்படும் தட்டை பக்தர்களிடம் காட்டுவது கிடையாது. அதுபோல, இங்குள்ள பைரவருக்கு சாத்தப்பட்ட சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் பூக்களையும் பக்தர்களுக்கு கொடுப்பதில்லை. சிவன், அம்பாள் சன்னதியிலும் பிரசாதம் தரப்படுவதில்லை.

புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை